Untitled

karnATik


Untitled
Home
Subscribe
Contact

Donate via PayPal




Print Friendly and PDF

Song: kaNNan varuginDra nEram


kaNNan varuginra nEram
raagam: maanji

20 naTabhairavi janya
Aa: S R2 G2 M1 P D2 N2 S
Av: S N2 D2 P M1 P M1 P G2 R2 S

taaLam: catushra Eka
Composer: OotukkaaDu VeNkaTasubbaiyyar
Language: Tamil

pallavi

kaNNan varuginRa nEram - karaiyOram
tenRal kaNDu kozhittadu pArum
kAnattiDai mOnakkuyil OsaikkiNayAnattaram
Anakkuzhalisai kELum - pOna
Aviyellaam kUDa meeLum (kaNNan)

caraNam 1

sallaccalanamiTTODum nadi pADum vanam tangi tangi cuzhanRADum - nalla
tudi pADiDum aDiyAravar manamAnadu idu pOl ena
tuLLi tuLLik kudittODum - pugazhc
colli colli isai pADum (kaNNan)

caraNam 2

kaNNan nagai pOlum mullai iNai illai - enRu
kaNDatum vaNDonRum vallai - idu
kanavO alla nanavO enak karudAdiru manamE oru kAlamum poiyonRum sollEn - engaL
kaNNananDri vERu illEn (kaNNan)

caraNam 3

tAzhai maDal nIttu nOkkum mullaippaarkum - enna
sowkkiyamO enRu kETkum - aDa
mozhi pEsiDa iduvE pozhudenavO
adO varum mAdavan
muttu muDiyinil sErvOm - angE
metta mettappEsi nErvOm (kaNNan)


Other information: Lyrics contributed by Lakshman Ragde.

Tamil script:
ராகம்: மாஞ்சி (நடபைரவி ஜன்யம்) தாளம்: சதுஸ்ர ஏக

பல்லவி
கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
தென்றல் கண்டு கொழித்தது பாரும்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கிணயானத்தரம்
ஆனக் குழலிசை கேளும் - போன
ஆவியெல்லாம் கூட மீளும் (கண்ணன்)

சரணம் 1
சல்லச்சலனமிட்டோடும் நதி பாடும் வனம் தங்கி தங்கி சுழன்றாடும் - நல்ல
துதி பாடிடும் அடியாரவர் மனமானது இது போல் என
துள்ளி துள்ளிக் குதித்தோடும் - புகழ் சொல்லிச் சொல்லி இசை பாடும் (கண்ணன்)

சரணம் 2
கண்ணன் நகை போலும் முல்லை இணை இல்லை - என்று
கண்டதும் வண்டொன்றும் வல்லை - இது
கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே ஒரு காலமும் பொய்யொன்றும்
சொல்லேன் எங்கள் கண்ணனன்றி வேறு இல்லேன் (கண்ணன்)

சரணம் 3
தாழை மடல் நீத்து நோக்கும் முல்லைப்பார்க்கும் என்ன சௌக்கியமோ என்று கேட்கும் - அட
மொழி பேசிட இதுவே பொழுதெனவோ அதோ வரும் மாதவன்
முத்து முடியினில் சேர்வோம் - அங்கே
மெத்த மெத்தப்பேசி நேர்வோம் (கண்ணன்)

first | previous | next

Contact us

updated on 10/03/2015